நாராயண சுவாமி கோவில் திருவிழா

பணகுடி அருகே நாராயண சுவாமி கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-07-13 20:52 GMT

பணகுடி:

பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் நாராயண சுவாமி நிழல் தாங்கல் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளிலும் காலை பணிவிடை, மதியம் உம்பான் அன்னதர்மம், மாலை பணிவிடை தர்மம், திருஏடு வாசிப்பு, இரவு அன்னதர்மம், அய்யா வைகுண்டர் பற்றிய இன்னிசை கச்சேரி நடந்தது. மூன்றாம் நாள் இரவில் பூ வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்