ரூ.14.20 கோடி போதைப்பொருள்; சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.14.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-12-17 09:19 GMT

சென்னை,

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கென்யா நாட்டை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் பயணியின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியபோது போதைப்பொருட்கள் அதிகப்படியாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் பயணியிடம் இருந்து, ரூ.14.20 கோடி மதிப்புள்ள கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் யாருக்காக போதைப்பொருட்கள் கடத்தி வந்தார். இவரது பின்னணியில் இருக்கும் போதைக்கும்பல் யார் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம்  ரூ.14.20 கோடி மதிப்புடைய கொக்கைன் (போதைப்பொருள்) பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்