நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

Update: 2022-12-06 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர் விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்