நங்கைமொழி சொக்கநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நங்கைமொழி சொக்கநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-09-03 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலின் உப கோவிலான நங்கைமொழி சொக்கநாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தமிழ் வேத தேவார திருமுறை விண்ணப்பம், தீபாராதனை, காலை 11 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 5மணிக்கு வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி பூஜை, மற்றும் முதலாம் கால யாக வேள்வி, மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக வேள்வி, மகா தீபாராதனை, காலை 11 மணிக்கு அஷ்டபந்தன கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மனநல மறு சீராய்வு மன்ற தலைவர் பால சுந்தர குமார், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் காந்திமதி, ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி சொக்கலிங்கம், தொழில் அதிபர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில் செயல் அலுவலர் காந்திமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்