தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் போலீசாரின் 50-வது பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி 25 பேர் கொண்ட பெண் போலீசார், சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று, சுமார் 1,000 கி.மீட்டர் படகு பயணம் செய்து சாதனை படைத்தனர். இதில் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை பெண் போலீஸ் வைத்தீஸ்வரி என்பவரும் கலந்து கொண்டு பதக்கம் பெற்றார். அவரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் பாராட்டினார். அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர்முரளிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.