நாமக்கல் நகராட்சி கூட்டம்

Update: 2023-08-31 18:45 GMT

நாமக்கல் நகராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மோகனூர் முதல் நாமக்கல் வரை 19 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் பிரதான குழாய்களில் சிறிய பழுது ஏற்பட்டாலும், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே பிரதான குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் நாமக்கல் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு சாலையில் புதிய சந்தை வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு மின்விளக்குகள் பொருத்துதல், தேவையான இடங்களில் மின் இணைப்புகள் வழங்குதல் மற்றும் குடிநீர் வினியோக பணிகள் உள்ளிட்ட கூடுதல் மேம்பாட்டு பணிகளை ரூ.24 லட்சத்தில் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இதில் நகராட்சி கொறடா சிவக்குமார், துணை கொறடா ஈஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்