நாமக்கல்: போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-16 11:18 GMT

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்த நீலகண்டன் வழக்கு விசயமாக வெளியே சென்று விட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் திடீரென அவர் ஏற்கனவே வாங்கி வந்திருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த போலீஸ் நிலையத்தில் இருந்த சக போலீசார் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் நீலகண்டன் பணிச்சுமை காரணமாக விஷம் அருந்தினாரா அல்லது சொந்த பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்