நாமக்கல்: தென்னை மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி

மின்னக்கல் அருகே தென்னை மரத்தில் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.;

Update: 2022-06-03 17:39 GMT


சேலம் மாவட்டம்,காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் விஜயகுமார் (வயது 45). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இவர் வடுகம்பாளையம் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (37), செல்வி (40), தந்தாயி (65) ஆகியோரும் அவருடன் அங்கு வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இன்று காலை விஜயகுமாரின் காரில் சேலம் நோக்கி சென்றுள்ளனர்.காரை விஜயகுமார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது வாய்க்கால் பட்டறை என்னும் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தென்னை மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் செல்வி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயமடைந்த மற்ற மூவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்