நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோ ரூ.102 ஆக குறைந்தது.
முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.82-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.