நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-15 18:45 GMT

எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மும்தாஜ் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணை தலைவர் இளவேந்தன், இணைசெயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்