நாமக்கல்லில் போக்குவரத்து விதிமீறல்கள் அபராத தொகை விழிப்புணர்வு

நாமக்கல்லில் போக்குவரத்து விதிமீறல்கள் அபராத தொகை விழிப்புணர்வு

Update: 2022-10-28 18:45 GMT

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் போலீஸ் நிலையம் அருகே நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலை வகித்தார். போலீஸ் நிலையம் அருகே துறையூர் சாலை சந்திப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி விளக்கி கூறினார். இதில் போக்குவரத்து துறையினர் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்