நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

Update: 2023-09-02 18:55 GMT

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் மாவட்ட செயலாளர் சுமதி அன்பழகன் தலைமையில் அக்கட்சியினர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் சென்னை மாநகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மதநல்லிணக்கம், சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்திலும் நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் பேசி உள்ளனர். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்