நாம் தமிழர் கட்சி நிர்வாகி 'திடீர்' சாவு

தக்கலை அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ‘திடீர்’ சாவு;

Update: 2023-03-02 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம், ஆலுவிளையை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது40), நாம் தமிழர் கட்சியின் முளகுமூடு பகுதி சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளராக இருந்தார். இவர் அழகியமண்டபத்தில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அருள்தாசின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த அருள்தாசுக்கு ஆலிஸ் (36) என்ற மனைவியும், 6 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்