நல்லதங்காள் ராஜவையன் கோவில் கும்பாபிஷேகம்

லால்குடி அருகே நல்லதங்காள் ராஜவையன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-12-12 20:26 GMT

லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் நல்லதங்காள் ராஜவையன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் குழுந்தாளம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நல்லதங்காள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் செய்தனர், மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடும், 9.40 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 9.50 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை சிவாச்சாரியார்கள் விஸ்வநாதன் குருக்கள், துரைசாமி, பிரபுசங்கர்சிவம் ஆகியோர் செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்