நல்லதங்காள் அம்மன் கோவில் விழா
நல்லதங்காள் அம்மன் கோவில் விழா நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அர்ச்சுனாபுரத்தில் வயலுக்குள் நடுவே நல்லதங்காள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு ஆனி மாதம் இப்பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் பொங்கல் விழாவினை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டு நேற்று காலை பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல வீட்டின் முன்பு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.