முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் கேட்டு நளினி கடிதம்

சிறையில் உள்ள முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் கேட்டு சிறைத்துறைக்கு நளினி கடிதம் அனுப்பியுள்ளதாக வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

Update: 2022-05-28 20:09 GMT

காட்பாடி

சிறையில் உள்ள முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் கேட்டு சிறைத்துறைக்கு நளினி கடிதம் அனுப்பியுள்ளதாக வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

வக்கீல் சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் தனிச்சிறையில் நளினி இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் அவர் தன்னுடைய தாய் பத்மாவை கவனித்துக் கொள்வதற்காக பரோலில் வெளியே வந்தார்.

காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர் தங்கியுள்ளார். அங்கிருந்து தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுகிறார். அவருக்கு தற்போது 5-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று மாலை நளினியை சந்தித்து பேசினார். முன்னதாக அவர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனையும் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. ஒரு வாரம் கடந்த நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

6 நாள் பரோல்

இதனால் 6 பேரின் விடுதலை தாமதம் ஆகும் வாய்ப்புள்ளதால் நளினியின் கணவர் முருகனுக்கு 6 நாள் அவசர கால பரோல் வழங்கக்கோரி நனிளி சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேபோல் முருகனின் பரோல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் 1-ந்தேதி மனு தாக்கல் செய்ய உள்ளோம். முருகனின் விடுதலை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் 6-ந்தேதி மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்