நாகேஸ்வர சாமி கோவில் தேரோட்டம்

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான நாகவள்ளி சமேத நாகேஸ்வர சாமி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2023-05-01 08:29 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் பழமை வாய்ந்த நாகவள்ளி சமேத நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான இந்தக்கோவிலில் சித்திரை பெருவிழா நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவில் உற்சவ மூர்த்திகளான நாகவள்ளி சமேத நாகேஸ்வர சாமிகளை தினசரி அன்ன வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், சேஷா சயன நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் ஆகியவற்றின் மீது மாலை வேளைகளில் ஊர்வலம் நடைபெற்றது. நேற்று நாகவள்ளி சமேத நாகேஸ்வர சாமியை சிறப்பு அலங்காரம் செய்து தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு ென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இந்தக்கோவிலில் இன்று சாமி, அம்மனை குதிரை வாகனத்திலும், நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகார நந்தி வாகனத்திலும், வரும் புதன்கிழமை ராவணேஸ்வர வாகனத்திலும், வியாழக்கிழமை ஆதிசேஷ வாகனத்திலும் ஊர்வலமாகக்கொண்டு செல்கின்றனர். வரும் 3-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் வசந்த உற்சவம் நடைபெற உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்