நாகர்கோவில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2022-05-24 20:56 GMT

நாகா்கோவில், 

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வங்கி தேர்வுகளில் தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்று மத்திய அரசு கூறியதாகவும், அதற்காக மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் வெற்றிவேந்தன், தி.மு.க. நிர்வாகிகள் சதாசிவம், சந்திரசேகர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தயாளன், நல்லபெருமாள், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்