நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் தீ

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-07-26 21:13 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

குப்பை கிடங்கில் தீ

நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

இந்த குப்பை குவியலில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மீன்டும் குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது. இதை கண்ட பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 2 வண்டிகளில் விரைந்து வந்து, குப்பை கிடங்கில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நள்ளிரவு வரை நீடித்தது.

மேயர் பார்வையிட்டார்

இதற்கிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் குப்பை கிடங்கிற்கு நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்