நாகலாபுரம் அரசு கல்லூரியில்பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
நாகலாபுரம் அரசு கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண். 205 சார்பாக கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை தாங்கி நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுக்கு பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி சிறப்புரையாற்றினார். கல்லூரி வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை மாணவ, மாணவிகள் அப்புறப்படுத்தினர். கல்லூரி பேராசிரியர்கள் கிரேசாஜேக்கப், சுரேஷ்பாண்டி, முனியசாமி, ஆல்ட்ரின் அதிசயராஜ், அய்யனார், கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.நிகழ்ச்சியை கல்லூரி மாணவர் தலைவர் செந்தில்குமார், மாணவி தலைவி முருகலட்சுமி ஆகியோர் நடத்தினர். முகாம் ஏற்பாட்டை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மகேஷ் செய்திருந்தார்.