நாகலாபுரம் அரசு கல்லூரியில்என் மண், எனது தேசம் நிகழ்ச்சி

நாகலாபுரம் அரசு கல்லூரியில் என் மண், எனது தேசம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-18 18:45 GMT

எட்டயபுரம்:

நேரு யுவகேந்திரா சாா்பில் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், கோவில்பட்டி அஞ்சல்துறை ஆகியவை இணைந்து நடத்திய எனது மண் எனது தேசம் நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. புதூர் யூனியன் பகுதியிலுள்ள கிராமங்களில் மண் சேகரிக்கும் ஊர்வலம் நடந்தது. அங்கு சேகரிக்கப்பட்ட மண் ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இசக்கி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஷ், கல்லூரி பேராசிரியை லீலா, கோவில்பட்டி கோட்ட அஞ்சல் துறை அலுவலர்கள் சுரேஷ், வெற்றி செல்வி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்