நாகை நகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் முற்றுகை
ஒப்பந்த தூய்மைப்பணியாளர் பணியிடத்தை ரத்து செய்யக்கோரி நாகை நகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
ஒப்பந்த தூய்மைப்பணியாளர் பணியிடத்தை ரத்து செய்யக்கோரி நாகை நகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
நகராட்சிகளில் ஒப்பந்த தூய்மை பணியாளர் பணியிடத்தை ரத்து செய்யக்கோரி நாகை நகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நகராட்சிகளில் ஒப்பந்த தூய்மை பணியாளர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி நகராட்சி பணியாளர்களுக்கு ரூ.579, பேரூராட்சி பணியாளர்களுக்கு ரூ.502, ஊராட்சி பணியாளர்களுக்கு ரூ.386 வழங்க வேண்டும்.
தரையில் அமர்ந்து
ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் வழங்கும் மாத சம்பளத்தினை நிறுத்திவிட்டு, ஊழியர்களின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக தம்பித்துரைபூங்காவில் இருந்து ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினரை நகராட்சி நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.