கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-30 20:30 GMT

கோத்தகிரி

மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் கோத்தகிரி ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட செயலாளர் பொன்மோகன்தாஸ், மாவட்ட தலைவர் ஜெயக்குமார், தொகுதி செயலாளர் சரவணன், தொகுதி தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்களை கண்டுக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில அரசு உடனே ராஜினாமா செய்ய வேண்டும், அங்கு நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர உடனே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்