தூத்துக்குடியில்தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
தூத்துக்குடியில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டடை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் முருகன். இவர் மீது சமீபகாலமாக பல்வேறு முறைகேடு புகார்கள் வந்து உள்ளன. இதனால் கடந்த வாரம் ஏட்டு முருகன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டன. விசாரணையில் புகார்கள் உறுதி செய்யப்பட்டதால், ஏட்டு முருகனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார்.