தென்னிந்திய பென்காக் சிலாட் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை
தென்னிந்திய பென்காக் சிலாட் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை நிகழ்த்தியுள்ளார்
தென்னிந்திய அளவிலான பென்காக் சிலாட் தற்காப்பு போட்டி கடலூரில் நடந்தது. இதில் 7 மாநிலங்களை சேர்ந்த 300-க்கும்மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் தமிழக அணி சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 51 கிலோ எடை பிரிவில் தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.அஸ்வின் ஜோசப் கலந்து கொண்டு விளையாடினார். இதில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர் அஸ்வின் ஜோசப், பயிற்சியாளர் முத்துசங்கர் குமார், உடற்கல்வி இயக்குனர் யோகன் அ.கற்றார் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், உதவி தலைமை ஆசிரியர்கள் விக்டர் டிசோசா, அந்தோணி எட்வர்ட் யூஜின், ஹம்பிரி மிராண்டா ஆகியோர் பாராட்டினர்.