ஈரோட்டில் த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்- நாளை மறுநாள் நடக்கிறது

த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோட்டில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-07-12 21:32 GMT

ஈரோடு

த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோட்டில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஈரோடு பெருந்துறைரோடு திண்டல் வேளாளர் மருத்துவமனை திடலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா மற்றும் கட்சியினர் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையொட்டி பொதுக்கூட்டத்துக்கான துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் விடியல் சேகர் பேசும்போது கூறியதாவது:-

தேர்தலுக்கான அடித்தளம்

காமராஜர் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காமராஜரின் எளிமை, வெளிப்படையான நிர்வாகம், ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் அமையும். இதில் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேசுகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் சுமார் 25 ஆயிரம் பேர் கூட்டத்துக்கு வருகின்றனர்.

விருதுநகரில் இருந்து காமராஜர் நினைவு ஜோதியும், தஞ்சாவூரில் இருந்து மூப்பனார் நினைவு ஜோதியும் பொதுக்கூட்ட திடலுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பொதுக்கூட்டம் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான அடித்தளமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் சண்முகம், நிர்வாகிகள் கவுதம், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்