லாரி, மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற மர்மநபர்கள்
நெல்லை அருகே பெண்ணை மிரட்டி லாரி, மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் கோட்டையடியை சேர்ந்தவர் மகராஜன். லாரிகள் வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 42) வீட்டில் தனியாக இருந்த போது, 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் மகராஜனுக்கு தெரிந்தவர்கள் என்று கூறினார்கள்.
பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை எடுத்துச்சென்றனர். அவர்களை தடுக்க முயற்சி செய்த ராமலட்சுமியை மிரட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களையும், வாகனங்களையும் தேடி வருகின்றனர்.