குப்பைக்கு தீ வைத்த மர்மநபர்கள்

நெல்லை சந்திப்பு மேம்பாலம் பகுதியில் குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்

Update: 2022-10-14 21:03 GMT

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் மேல்பகுதியின் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன. அதேபோல் கீழ்பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கீழ்பாலத்தின் இருபுறங்களிலும் அந்த பகுதியில் உள்ளவர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகளில் நேற்று காலை மர்மநபர்கள் தீ வைத்து சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென எரிந்தது. தகவலறிந்த தச்சநல்லூர் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேம்பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த குப்பையில் தீ வைத்தது யார் என்று நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்