ஆடிட்டர் வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள்
தேனி அருகே ஆடிட்டர் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடினர்.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 66). ஆடிட்டரான இவர், சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பழனிசெட்டிபட்டியில் உள்ள அவரது வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.