கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள்
ரங்கப்பனூரில் கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் போலீசார் தீவிர விசாரணை
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க மற்றும் கண்காணிக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கண்காணிப்பு கேமராவை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.