கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்

குடியாத்தம் அருகே மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றனர்.

Update: 2022-11-02 17:05 GMT

குடியாத்தம் அருகே மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றனர்.

உண்டியலை தூக்கி சென்றனர்

குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதன் பின்னர் 5 மாதமாக உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை.

நேற்று முன்தினம் இரவு பூசாரி வழக்கம்போல பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டிக் கொண்டு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது கோவில் உண்டியலை காணவில்லை. கோவிலின் பின்பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஏரிக்கால்வை அருகே தனியார் நிலத்தில் உண்டியல் கிடந்தது.

நகை பணம் திருட்டு

கோவிலின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ஊண்டியலை தூக்கிச் சென்று, அதிலிருந்த சிறு சிறு நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடைக்குஎடை போட்ட நாணயங்களும், சிறு சிறு நகைகளும் அந்த உண்டியலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊர் தர்மகர்த்தா எஸ்.வி.ராமு, குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் திருட்டு நடைபெற்ற எட்டியம்மன் கோவிலிலும், உண்டியலில் கிடந்த இடத்திலும் பார்வையிட்டனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்