நள்ளிரவில் புகைப்படம் எடுக்கும் மர்ம நபர்கள்

வாணியம்பாடியில் தொழிலதிபர்கள் வீடுகளை நள்ளிரவில் புகைப்படம் எடுக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்.

Update: 2023-07-25 18:50 GMT

வாணியம்பாடி நகரின் முக்கிய பகுதியான ஆசிரியர் நகர், அமீனாபாத், பெரிய பேட்டை, முஸ்லீம்பூர், சென்னம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பூக்கடை பஜார் பகுதியிலும் கடந்த 3 நாட்களாக 4 மர்ம நபர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வீடுகளை நள்ளிரவு நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதே இடத்தில் அவர்களின் வீடுகளுக்கு எதிரே நின்று செல்பி எடுத்துக்கொண்டும் செல்கின்றனர்.

இது சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனை கண்ட தொழிலதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் நேற்று மாலை வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் நள்ளிரவு நேரத்தில் 4 நபர்கள் தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்