குழந்தையுடன் மாயமான வடமாநில பெண்
வடமதுரை அருகே கணவருடன் வசித்து வந்த வடமாநில பெண் தனது குழந்தையுடன் மாயமானார்.
சத்தீஸ்கர் மாநிலம், பலோடா பஜார், கஸ்டால் பகுதியை சேர்ந்தவர் திரிலொஞ்சன் யாதவ் (வயது 26). இவரது மனைவி ஓமன் (22). இவர்களுக்கு நந்தகோபால் (4) என்ற மகனும், பிரதீபா (1½) என்ற மகளும் உள்ளனர். திரிலொஞ்சன் யாதவ் கடந்த 6 மாதங்களாக வடமதுரை அருகேயுள்ள சீலப்பாடியான் களம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தேங்காய் மட்டை உரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்த ஓமன் தனது மகள் பிரதீபா உடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. திரிலொஞ்சன் யாதவ் தனது மனைவி மற்றும் மகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து திரிலொஞ்சன் யாதவ் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணையும், அவருடைய குழந்தையையும் தேடி வருகிறார்.