பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொழிலாளி மர்ம சாவு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொழிலாளி ஒருவர் மர்மமாக இறந்தார்.

Update: 2022-06-23 12:48 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த தொழிலாளி கந்தகுமார் (வயது 39) என்பது தெரியவந்தது. இதற்கிடையில் அவர் எதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. மேலும் அவர் மீது தாலுகா, மகாலிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் இறந்தது குறித்த முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்