மர்மமான முறையில் 3 காட்டு பன்றிகள் சாவு

மர்மமான முறையில் 3 காட்டு பன்றிகள் சாவு

Update: 2022-06-19 16:15 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் வேதாந்திரி நகருக்கு செல்லும் பாதையில் 3 காட்டு பன்றிகள் அருகருகே செத்து கிடந்தன. இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து உதவி வனபாதுகாவலர் சிவகுமார், பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன், வனவர் பாலசந்திரிகா, வனகாப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, மர்மமான முறையில் 3 பன்றிகள் செத்தது குறித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பன்றிகள் டெம்போவில் ஏற்றி வனசரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. பன்றிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது இன்று (திங்கட்கிழமை) நடக்கும் பிரேத பரிசோதனைக்கு பின்தான் தெரியும் என வனத்துறையினர் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்