நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே சலவை தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
சலவை தொழிலாளி
நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 48). சலவை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வெங்கடாஜலபதி, வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கி உள்ளார்.
பின்னர் மறுநாள் காலை அவர் வெகுநேரமாக படுக்கையில் இருந்து ஏழுந்து வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அவர் மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உறவினர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வெங்கடாஜலபதி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.