அரசு பள்ளி கொடிக்கம்பத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகள்
வடகாடு அருகே அரசு பள்ளி கொடிக்கம்பத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
வடகாடு அருகே புளிச்சங்காடு கைகாட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இருந்த கொடிக்கம்பத்தை மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் இரவு திருடி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இந்த தொடக்கப்பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினர். பள்ளியில் புகுந்த மர்ம ஆசாமிகள் பள்ளியின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததாகவும் அது சற்று கடினமாக இருந்த காரணத்தால் கொடிக்கம்பத்தை அடியோடு அறுத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.