நோயாளியிடம் நகை திருடிய மர்ம ஆசாமி

தனியார் மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-24 20:45 GMT


கோவை


அன்னூரை சேர்ந்தவர் கலை செல்வி. இவர் கால் வலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருடன், அவரது மகன் லோகேஸ்வரன் இருந்தார். இந்த நிலையில் கலைசெல்வி அறைக்கு பிசியோதெரபிஸ்ட் என்று கூறி, ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் பிசியோதெரபி பயிற்சி அளிக்க வேண்டியது உள்ளதால் லோகேஸ்வரனை வெளியில் நிற்குமாறு கூறினார்.


இதையடுத்து அந்த நபர் வெளியே சென்றபிறகு, அறையில் இருந்த 4 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கலைசெல்வி, இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதன்பேரில் நிர்வாகிகள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதுபோன்ற ஊழியர் மருத்துவமனையில் வேலை பார்க்கவில்லை என்றும், வெளியில் இருந்து வந்த மர்ம ஆசாமி நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற ஆசாமியை தேடி வருகிறார்கள்.




Tags:    

மேலும் செய்திகள்