மர்ம விலங்கு கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலி
கொளத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 10 ஆடுகள் செய்தன.
சேலம்
கொளத்தூர் தார்காட்டை அடுத்த செம்மலை ஏரி செவிலான் காடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சப்பன் (வயது 50), விவசாயி. இவர் தனது நிலத்தில் பட்டி அமைத்து 10 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இவரது பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கிருந்த 10 ஆடுகளையும் கடித்து குதறி கொன்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த மர்ம விலங்கை கண்டறிந்து விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கேட்டு கொண்டார்.