மர்ம விலங்கு கடித்து ஆடு, கோழிகள் செத்தன

சூளகிரி அருகே மர்ம விலங்கு கடித்து ஆடு, கோழிகள் செத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-12-19 18:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகே மர்ம விலங்கு கடித்து ஆடு, கோழிகள் செத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆடுகள், கோழிகள் செத்தன

சூளகிரி அருகே உள்ள திகடரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா (வயது62). விவசாயி. இவர் ஆடு, கோழிகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் முனியம்மா ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பிறகு இரவு கொட்டகையில் அடைத்து வைத்தார். இரவு நேரம் என்பதால் அதில் கோழிகளும் தங்கின.

இந்த நிலையில் நேற்று காலை அவர் கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு 7 செம்மறி ஆடுகள், 5 கோழிகள் மர்ம விலங்கு கடித்து குதறியதில் செத்து கிடந்தன. இதைக்கண்டு முனியம்மா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்குதகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் விசாரணை

அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது திகடரப்பள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளதால் மர்ம விலங்கு கிராமத்திற்குள் புகுந்து ஆடுகள், கோழிகளை கடித்து குதறி சென்றது தெரியவந்தது. மர்ம விலங்கின் கால் தடத்தை வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்