முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
சீர்காழி அருகே ராமாபுரம் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது
சீர்காழி:
சீர்காழி அருகே நிம்மேலி ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன், அய்யப்பன், பேச்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு ஆகி மேளதாளங்கள் முழங்கிட புனிதநீர் கடங்கள் கோவிலை வலம்வந்து அய்யப்பன் சுவாமி விமானகலசம், மூலஸ்தான கலசம், முத்துமாரியம்மன் விமான கலசம் ஆகியவற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமாபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.