பொங்கலூர் அருகே அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பொங்கலூர் அருகே அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
பொங்கலூர்
பொங்கலூர் அருகே அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
பொங்கலூர் அருகே அலகுமலையில் முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூச தேரோட்டம் மிகச்சிறப்பாக வருடந்தோறும் நடைபெற்ற வருகிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி இரவு கிராம சாந்தி செய்யப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் கைலாசநாதர் மற்றும் முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில் கோவில்களில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அதன்பின்னர் ஒவ்ெவாரு நாளும் தினமும் உபயதாரர்கள் சார்பாக சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மதியம் ஒரு மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அமைச்சர்கள் பங்கேற்பு
இதில் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், கைலாசநாதர் கோவிலை சுற்றி இழுத்து வந்தனர்.
விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அழகுமலை ஆண்டவர் தீர்த்தக்காவடி, கணபதிபாளையம், சேமலைக்கவுண்டம்பாளையம் அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மாலை பரிவேட்டையும், நாளை ( செவ்வாய்க்கிழமை) சுவாமி திருவீதி உலாவும், 8-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் கே.பி.சின்னு கவுண்டர் தலைமையில் செய்து நிர்வாகிகள் செய்திருந்தனர்.