முத்துக்குமார சுவாமி சப்பர வீதி உலா

சிவகிரியில் கந்தசஷ்டி விழாவையொட்டி முத்துக்குமார சுவாமி சப்பர வீதி உலா வருதல் நடந்தது.

Update: 2022-10-25 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள், தீபாராதனை, மாலையில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

6-ம் திருநாளான வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 31-ந் தேதி திருக்கல்யாணம், 1-ந் தேதி ஊஞ்சல் காட்சி, 2-ந் தேதி பள்ளியறை நிகழ்ச்சி, 4-ந் தேதி தளத்து கோவிலில் வைத்து மகுடாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்