முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பந்தலூர் அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-05-24 22:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.2 திருவள்ளுவர் நகர் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா கடந்த 22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 6.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல், காட்டு கட்டுதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு கங்கையில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு 7 மணிக்கு முதல் கால யாக பூஜை, தீபாராதனை, 9.30 மணிக்கு பாலாபிஷேகம், கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்