முத்து பிரம்மணத்தாள், சாம்புக மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்

முத்து பிரம்மணத்தாள், சாம்புக மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-06-29 19:32 GMT

சமயபுரம்:

மண்ணச்சநல்லூரில் நடுப்பெரிய தெருவில் முத்து பிரம்மணத்தாள், சாம்புகமூர்த்தி, ராஜஅய்யர், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளிய கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த குடிபாட்டு மக்கள் திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காவிரியில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் மாலையில் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை தொடங்கி, மண்டப அர்ச்சனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையும், பின்னர் வேதிகா அர்ச்சனை மற்றும் 96 வகை திரவிய ஹோமமும், மகா பூர்ணாஹூதியும் நடைபெற்றது.

பின்னர் யாத்ராதானமும், கடம் புறப்பாடும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க முத்து பிரம்மணத்தாள், சாம்புகமூர்த்தி, ராஜஅய்யர், மதுரைவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோபூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி டி.கே.மருதை செட்டியார், ஜெகநாதன், ஜனார்த்தனன், பிரசன்னன் மற்றும் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்