குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்-மந்திரி சாமி தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்மந்திரி சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-11-23 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சனிக்கிழமை புதுச்சேரி மாநில முதல்மந்திரி ரங்கசாமி வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கோவிலுக்குள் சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வளாகத்தில் 27 பெண்களுக்கு இலவசமாக ேசலை வழங்கினார். அங்கிருந்து அவர் காரில் புதுச்சேரி புறப்பட்டு ெசன்றார்.

Tags:    

மேலும் செய்திகள்