முத்தாரம்மன் கோவிலில்பவுர்ணமி திருவிளக்கு பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பங்குனிமாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், மூலஸ்தான தீபாரதனை நடந்தது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.