முத்தாரம்மன் கோவிலில்2,008 சுமங்கலி பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 2,008 சுமங்கலி பூஜை நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று காலையில் கணபதி வழிபாடு, தூய் மீட்பு சடங்கு, விநாயகர் வேள்வி, இளைஞர் பூஜை, நிறை நிவி அளித்தல், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு ஒன்பது கோள் வேள்வி, காலை 10 மணிக்கு குபேர வேள்வி, செல்வ வழிபாடு, பசு பூஜை நிறை அவி அளித்தல், காலை 10.30 மணிக்கு வியாபாரம், தொழில் விருத்தி அடைய வேண்டி லஷ்மி ஹோமம் வழிபாடு நடந்தது. காலை 11 மணிக்கு 1,008 கலச பூஜை, இறைவி வேள்வி, வேதம் திருமுறைகள் ஓதுதல், நிறை நிவி அளித்தல் தீபாராதனை நடந்தது. காலை 12 மணிக்கு 1,008 கலசம் சிறப்பு நன்னீராட்டு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 2,008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது.