முத்தாரம்மன் கோவில் கொடை விழா

உடன்குடி அருகே முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது.;

Update: 2022-09-24 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே வெங்கட்ராமானுஜபுரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, புனித நீர் எடுத்து முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் வில்லிசை, சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, கும்பம் வீதி உலா வருதல், 208 திருவிளக்கு பூஜை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், சிறப்பு பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்