முத்தாலவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கல்பட்டு கிராமத்தில் நடந்த முத்தாலவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-08 17:22 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அடுத்த காணை ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ முத்தாலவாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 5-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் சங்கல்பம், வாஸ்துசாந்தி ஹோமம், கலசபூஜை, திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, கலச அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 10 மணியளவில் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது.

கும்பாபிஷேகம்

பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று பகல் 12 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் அஸ்வினிஒளி, சாரதாம்பாள் கலியமூர்த்தி, கோவில் தர்மகர்த்தாக்கள் அண்ணாதுரை, கல்விராயன், குப்புசாமி, ராமமூர்த்தி, கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம் மற்றும் கல்பட்டு, நத்தமேடு சிறுவாக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்